search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ சேவை"

    • அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று 5 நபர்களுக்கு புறநோயாளிக்கான உள்நுழைவுச் சீட்டினை வழங்கி தொடங்கி வைத்தார்.
    • மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் 2,513 பயனாளிகளுக்கு ரூ.16.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் முன்னிலையில் வழங்கினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று 5 நபர்களுக்கு புறநோயாளிக்கான உள்நுழைவுச் சீட்டினை வழங்கி தொடங்கி வைத்தார்.

    மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் 2,513 பயனாளிகளுக்கு ரூ.16.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் முன்னிலையில் வழங்கினார்.

    700 படுக்கை

    நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை கட்டடங்கள் ரூ.159.452 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 4 லட்சத்து 52 ஆயிரத்து 488 சதுர அடி பரப்பளவில் 700 படுக்கை வசதிகளுடன் கூடிய தரைத்தளத்துடன் 6 தளங்கள் கொண்ட கட்டடமாக கட்டப்பட்டுள்ளது.

    நலத்திட்ட உதவிகள்

    இந்த விழாவில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் சார்பில் ரூ.16.51 கோடி மதிப்பில் 186 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 2450 உறுப்பினர்களுக்கு வங்கி பெருங்கடன், மாற்றுத்தி றனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,07,000 மதிப்பில் பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலி, 2 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பற்று அட்டைகள், 2 திருநங்கைகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட வாழ்த்து மடல், சுகாதார துறையின் சார்பில் ரூ.4,000 மதிப்பில் 2 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நலப்பெட்டகம், 2 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு அட்டைகள், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி விளையாட்டு விழா-2023 போட்டியில் வெற்றி பெற்ற 1 நபருக்கு கோப்பை, ஏழை மாணவ, மாணவிகளுக்கு உதவும் "விருட்சம்" அமைப்பின் மூலம் 3 மாணவ, மாணவிகளுக்கு ரூ.18,400 மதிப்பில் உதவித்தொகை என மொத்தம் 2,513 பயனாளிகளுக்கு ரூ.16.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து ராஜேஷ்குமார் எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.92.30 லட்சம் மதிப்பில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உபகரணங்கள் பெறுவதற்காக காசோலையினை வழங்கினார்.

    மகிழ்ச்சி

    நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 700 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி மருத்துவ சேவையை தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மருத்துவ சேவையை விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கிற என்னை அழைத்து எதற்காக நமது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைக்கச் சொல்கிறார் என்று யோசித்துப் பார்த்தேன்.

    பணிச்சுமை

    எல்லோரும் தினந்தோறும் நன்றாக விளையாடினால் தான், உடற்பயிற்சி செய்தால் தான் எதிர்காலத்தில் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு வாழ முடியும். அதன் மூலம் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான பணிச்சுமையை குறைக்க முடியும் என்பதை உணர்த்த தான் நமது அண்ணன் மா.சு. என்னை அழைத்து இந்த மருத்துவச் சேவையை தொடங்கி வைக்கச் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

    நாமக்கல் மாவட்டம் பொதுவாக கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருகிற மாவட்டம். தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் பல மருத்துவர்களை உருவாக்கியது

    நாமக்கல் மாவட்டத்தில் இயங்குகிற பள்ளிகள் தான். நீட் தேர்வு இல்லாமல் இருந்தால் இன்னும் அதிகமான ஏழை, எளிய அரசுப்பள்ளி மாணவர்களால் மருத்துவக் கல்வி பெற முடியும். அதை நோக்கி தான் நம் அரசு செயல்பட்டு வருகிறது.

    நவீன வசதிகள்

    நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் படித்த மாணவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்ந்து படிக்கின்றனர். ஆனால், இந்த மாவட்டத்துக்கென்று ஒரு அரசு மருத்துவக் கல்லூரி இல்லாமல் இருந்தது. இன்றைக்கு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ சேவைகள் தொடங்கப்படுவதன் மூலம் அந்தக் குறை நீக்கப்படுகிறது என்பதில் நான் பெருமை அடைகிறேன்.

    திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மக்கள் நல்வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறது. இது தி.மு.க. அரசு முதன்முதலில் ஆட்சிக்கு வந்த 1967-ம் ஆண்டு தொடங்கி இப்போது வரை தொடர்கிறது.

    கடந்த 2006-ம் ஆண்டிலேயே மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி வேண்டும் என்று கலைஞர் கனவு கண்டார். அதன் விளைவாக இன்று தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நவீன வசதிகள், கூடுதல் படுக்கை வசதி கொண்ட கட்டடங்கள் தி.மு.க. அரசால் ஏற்படுத்தப்பட்டன.

    நதி நெருக்கடி

    இன்றைக்கு கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு தான் இந்த அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து கூடுதல் நிதியை ஒதுக்கி தந்துக் கொண்டிருக்கிறது. நகரப் பகுதிகளில் வாழுகிற மக்களுக்கு இருக்கிற மருத்துவ வசதிகள் கிராமப்புறங்களில் வாழுகிற மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அடுத்து, மருத்துவச் சேவையைத் தேடி மக்கள் வருவதைக் காட்டிலும் மக்களைத் தேடி மருத்துவச் சேவைகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தி.மு.க. அரசு உறுதியாக இருக்கிறது.

    தமிழ்நாட்டின் பல நகரப் பகுதிகளில் இருக்கிற அரசு மருத்துவமனைகளை மட்டுமல்ல கிராமப் பகுதிகளில் இன்றைக்கு இருக்கக் கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் பலவற்றை தி.மு.க. அரசு தான் ஏற்படுத்தியது.

    இப்போது நமது முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் 8 துணை சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 4 கோடியே 95 லட்சம் கோடி ரூபாய் செலவில் 11 ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 80 லட்சம் ரூபாய் செலவில் கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

    அதோடு மட்டுமல்ல 1 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் குமாரபாளையம் மற்றும் கொல்லிமலை அரசு மருத்துவமனைகளில் ஆய்வகத்துடன் கூடிய புறநோயாளிகள் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ரத்த வங்கி போன்ற மருத்துவ சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டு மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

    இப்போது 2023 -– 2024-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் நாமக்கல் மாவட்ட மக்கள் நல்வாழ்வுப் பணிகளுக்காக 42 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 29 அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. எனவே தி.மு.க. அரசை பொறுத்தவரை சமுதாயத்தை பாதிக்கிற நோய்களுக்கும், அதேபோல் மக்களை பாதிக்கிற நோய்களுக்கும் தேவையான சிகிச்சைகளை அளித்து குணப்படுத்த வேண்டிய 2 பணிகளிலும் எந்த தொய்வும் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    திராவிட மாடல்

    நமது சமுதாயம் ஆரோக்கியமாக வாழவும், மக்கள் ஆரோக்கியமாக வாழவும் தேவையான அனைத்து நடவடிக்கை களையும் இந்த அரசு எடுக்கும் என்ற உறுதியினை உங்களுக்கு அளிக்கிறேன். சமீபத்தில், தமிழ்நாட்டில் இருக்கிற சுகாதார வசதிகளைப் பார்த்து குஜராத்தில் இருந்து வந்த மருத்துவக் குழுவினர் ஆச்சரியத்தோடு பாராட்டிய செய்திகளை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது தான் திராவிட மாடல்.

    மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பொறுத்தவரை இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு வழிகாட்டக் கூடிய ரோல் மாடல் துறையாக விளங்கி வருகிறது. அது மேலும் மேலும் தொடர மருத்துவர்களும் செவிலியர்களும் மற்ற துறை பணியாளர்களும் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் ராஜேஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம் (நாமக்கல்), பொன்னுசாமி (சேந்தமங்கலம்), மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, மாவட்ட கலெக்டர் உமா, நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, நகர்மன்றத் தலைவர் கலாநிதி, மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பவுனாம்பாள் நகரில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற நல வாழ்வு மையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
    • நகர் நல அலுவலர் எழில் மதனா, வார்டு செயலாளர் சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பவுனாம்பாள் நகரில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற நல வாழ்வு மையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மருத்துவ சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி ஆணையாளர் காந்தி ராஜ் தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகர மேயர் சுந்தரி ராஜா கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி நகரத்துடன் நல வாழ்வு மையத்தை திறந்து வைத்து மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார். இதில் பகுதி செயலாளர் சலீம், மண்டல குழு தலைவர் சங்கீதா செந்தில் முருகன், மாநகராட்சி கவுன்சிலர் சாய்துநிஷா சலீம், நகர் நல அலுவலர் எழில் மதனா, வார்டு செயலாளர் சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • புதிய மருத்துவ சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 500 படுக்கைகள், அதிதீவிர சிகிச்சை, அவசர சிகிச்சை உள்ளிட்ட புதிய மருத்துவ சேவைகள் தொடக்க விழா நடந்தது.

    கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் சுப்ரமணியன், ராஜ கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய மருத்துவ சேவைகளை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ.க்கள் கருமாணிக்கம், முருகேசன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திசை வீரன், ராமநாதபுரம் நகர் சபை தலைவர் கார்மேகம், துணை

    தலைவர்பிரவீன் தங்கம், ராமநாதபுரம் ஒன்றிய தலைவர் பிரபாகரன், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினரும், நகராட்சி உறுப்பினருமான ஜஹாங்கீர், போகலூர் ஒன்றிய தலைவர் சத்யா குணசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜயகுமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில் குமார், மருத்துவர்கள் மலையரசு, மனோஜ்குமார், ஆனந்த் சொக்கலிங்கம் உள்பட பலர் கொண்டனர்.

    • 100 கிராமங்களை தத்தெடுப்பது இந்திய மருத்துவ சங்கத்தின் கனவு திட்டமாகும்.
    • விரைவில் மீதி 50 கிராமங்கள் தத்தெடுக்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    இந்திய மருத்துவ சங்க(ஐ.எம்.ஏ.) அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு, இந்திய மருத்துவ சங்க சி.ஜி.பி. பிரிவு மற்றும் ஏ.எம்.எஸ். பிரிவு தொடக்க விழா, டாக்டர்கள் தின கொண்டாட்டம் ஆகிய ஐம்பெரும் விழா திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள காயத்ரி ஓட்டலில் நடந்தது. ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. தலைவர் டாக்டர் டி.செந்தமிழ் பாரி தலைமை தாங்கினார். ஐ.எம்.ஏ.அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை தலைவர் டாக்டர் மோகன சுந்தரி வரவேற்புரையாற்றி தனது பொறுப்பை புதிய தலைவர் டாக்டர் அஜாஸ் பி.அன்சாரியிடம் ஒப்படைத்தார்.

    டாக்டர் அஜாஸ் பி.அன்சாரி அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை செயலாளர் டாக்டர் டி.கார்த்திகேயன், பொருளாளர் டாக்டர் கே.சுந்தரமூர்த்தி, துணை தலைவர் டாக்டர் பி.ஹரிவீர விஜயகாந்த், இணை செயலாளர் டாக்டர் பி.நல்லசிவம், மத்திய கவுன்சில் உறுப்பினர் டாக்டர் முமகது முபாரக் அலி, மாநில கவுன்சில் உறுப்பினர் டாக்டர் கே.பொம்முசாமி, ஆலோசனை குழு உறுப்பினர்கள் டாக்டர் ஆர்.ஜெயராமகிருஷ்ணன், டாக்டர் யு.ரமணி, டாக்டர் என்.ராஜ்குமார், டாக்டர் எஸ்.சரவணன், டாக்டர் ஆர்.பிரகாஷ் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்தார்.

    திருப்பூர் தெற்கு தொகுதி செல்வராஜ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை சார்பில் அனைத்து மருத்துவ சேவை வழங்குவதற்காக திருப்பூரில் உள்ள கணியாம்பூண்டி கிராமத்தை தத்தெடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிறந்த டாக்டர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதேபோல் 21 டாக்டர்களுக்கு 'பில்லர்ஸ் ஆப் டெக்ஸ்சிட்டி' என்ற விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. தலைவர் டாக்டர் டி.செந்தமிழ் பாரி வழங்கி பேசியதாவது, பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்காக 100 கிராமங்களை தத்தெடுப்பது இந்திய மருத்துவ சங்கத்தின் கனவு திட்டமாகும். இதற்காக இதுவரை 50 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. விரைவில் மீதி 50 கிராமங்கள் தத்தெடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. செயலாளர் டாக்டர் என்.ஆர்.டி.ஆர்.தியாகரஜன், தேசிய ஐ.எம்.ஏ. முன்னாள் தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால், துணை தலைவர் டாக்டர் ஆர்.குணசேகரன், ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. தேர்வு தலைவர் டாக்டர் அபுல் ஹசன், மேற்கு மண்டல துணை தலைவர் டாக்டர் கருணா, முன்னாள் துணை தலைவர் டாக்டர் சி.என்.ராஜா, டி.எம்.எப். டாக்டர் தங்கவேல், ஸ்ரீ குமரன் மருத்துவமனை டாக்டர் செந்தில் குமரன், ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. டாக்டர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை செயலாளர் டாக்டர் டி.கார்த்திகேயன் நன்றியுரையாற்றினார்.

    • சாதனையாளர் விருது பெறும் மதுரை டாக்டர் பரத் கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு உதவினார்.
    • மதுரை அச்சம்பத்தில் உள்ள மது இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் நிறுவனரும், பேராசிரியருமான டாக்டர் வி.பரத் ஏழை-எளிய மக்களுக்கு மருத்துவ சேவைகளை இலவசமாக செய்து வருகிறார்.

    மதுரை

    மதுரை அச்சம்பத்தில் உள்ள மது இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் நிறுவனரும், பேராசிரியருமான டாக்டர் வி.பரத் ஏழை-எளிய மக்களுக்கு மருத்துவ சேவைகளை இலவசமாக செய்து வருகிறார். பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் டாக்டர் பரத், கொரோனா கால கட்டத்தில் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மருந்துகளை வழங்கி உதவினார். அதோடு, 10 ஆயிரம் கொரோனா நோயாளிகளையும் குணப்படுத்தி உள்ளார்.

    அவரது நிறுவனமான மது இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா இடர்பாடு களின்போது உதவிகளை வழங்கியுள்ளார். மேலும் புற்று நோயாளிகளுக்கு தனி கவனம் செலுத்தி அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை டாக்டர் பரத் செய்து வருகிறார்.

    இவரின் தன்னலமன்ற சேவையை கருதி வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், லண்டன் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்தியா, மனித இனத்திற்கு சிறந்த முறையில் சேை செய்ய வேண்டும் என் அவரது பணிவையும், தொலைநோக்கையும் பாராட்டி உலக சாதனையாளர் விருதை வழங்கியதோடு அதன் இந்திய பதிப்பு 2021-ல் அவரை சேர்த்துள்ளது.

    மேலும் இளைஞர்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ெதாழில் திறன்களை பயிற்றுவிக்கும் பயிற்சியையும் டாக்டர் பரத் அளித்து வருகிறார்.

    இவ்வாறு பல சமூக சேவைகளை செய்து வரும் டாக்டர் பரத்துக்கு தனியார் நிறுவனம் "சாதனை செல்வன்" விருது வழங்கி கவுரவித்துள்ளது.

    • கடலூர் தி சுசான்லி டாக்டர் ரவி, உஷா ரவிக்கு விருது வழங்கப்பட்டது.
    • கொரோனா காலகட்டத்தில் பல்வேறு மருத்துவ சேவைகள் பல இலட்சம் மூலிகை மருந்துகளை இலவசமாக வழங்கினார்கள்.

    கடலூர்:

    கடலூர் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் கிளினிக்கின் தலைமை மருத்துவர் பேராசிரியை டாக்டர் உஷாரவி, சுசான்லி டாக்டர் ரவி கடந்த 30 வருடங்களாக இயற்கை மருத்துவத்துறையில் தனித் திறனுடனும், தனிப்பற்றுடனும் சேவை செய்து கொண்டுள்ளனர். இவரும் குறு, சிறு தானியங்கள், மூலிகைகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருவதோடு, பல சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, நிறுவனங்களுக்கு ஆலோசகராக உள்ளனர்.

    இந்த நிலையில் பேராசிரியை உஷாரவி பைபாஸ் அக்குபஞ்சர் என்ற தனது ஆய்வுக் கட்டுரையின் மூலமாக உலக அக்குபஞ்சர் கருத்தரங்கு 2000-ம் ஆண்டில் சீனாவில் சிறப்பு விருது பெற்றார்.

    அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பெற்ற தாய்க்கு ஏற்படும் சில பின் விளைவுகளை எளிய முறையில் அக்குபஞ்சரில் குணப்படுத்துவது எப்படி என ஆய்வு செய்திருந்தார். சுசான்லி டாக்டர் ரவி , பேராசிரியர் உஷா ரவி மருத்துவ ஆய்வுக்கட்டுரைகள், மருத்துவ மற்றும் பொதுநலன் விழிப்புணர்வு கட்டுரைகள், கொரோனா காலகட்டத்தில் பல்வேறு மருத்துவ சேவைகள் பல இலட்சம் மூலிகை மருந்துகளை இலவசமாக வழங்கினார்கள். இவ்வாறு பல சேவைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

    இவர்களின் சேவைப் பணியினை பாராட்டி கோவையில் பேரவை மற்றும் தனியார் ஏஜென்சி உள்ளிட்டவைகள் இவர்களை தேர்ந்தெடுத்து க்ரைம் கதையாசிரியர் ராஜேஷ் குமார், திரைப்பட இயக்குனர் உதயகுமார், எழுத்தாளர்கள் லேனா தமிழ்வாணன், மோகன்தாஸ் மற்றும் சுபா சுப்புரத்தினம் ஆகியோரால் பின்னாக்கல் பெர்பார்மர் அவார்டு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    ×